வாக்குப்பதிவு நாள் வரை திமுக டிராமா அரங்கேறியது- வானதி சீனிவாசன் தெரிவிப்பு.

கோவை: இன்று காலை வரை திமுக டிராமா அரங்கேறியது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை, சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

Advertisement

‘2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகின்றது என்று கூறினார்

பெண்களும்,
இளைஞர்களும் அதிகளவு வாக்களித்து வருகின்றனர் என்றும்

தேர்தல் பரபரபிற்கு மத்தியிலும்,
திமுக இன்று காலை வரை கோல்ட் காயின்,சில்வர் காயின் என டிராமா செய்வதாக தெரிவித்தார்

ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என்றும் கூறினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி 6 மாத காலமாக போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு
விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்.

கோவை தெற்கு தொகுதியில்
தேர்தல் கமிசன் கண்ணில் மண்ணை தூவி அராஜாகம் நடந்து கொண்டு இருக்கின்றது . தூங்கி கொண்டு இருப்பவர்களை எழுப்பி
கோல்ட் காயின், சில்வர் காயின் என ஏமாற்றி வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் இதே மாதிரி டிராமா செய்தார்கள் . இப்போது குப்பை கூட எடுக்க வருவதில்லை. ஆட்சி மாற்றம் நிச்சயமாக வேண்டும். மக்கள் இதை செய்வார்கள் என தெரிவித்தார்.

இளைஞர் சக்தியால் எதுவும் முடியும். இன்ஸ்ட்டா, சமூக ஊடகத்தில் இருப்பது அல்ல அரசியல்.2 மணி நேர சினிமா என்பது வேறு அரசியல் வேறு. இன்ஸ்டா என்பது ஒரு டூல். முடிவெடுப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும். நிறைய இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளது என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

2026ல் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்- வாக்கு செலுத்திய கோவை அதிமுக வேட்பாளர் நம்பிக்கை…

கோவை: 2026ல் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என வாக்கினை பதிவு செய்த பின் பேட்டி அளித்த சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காலை...

Video