கோவை: கோவை அருகே டிரான்ஸ்பார்ம் அருகில் யானை உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் அருகே காப்புக்காட்டுக்கு அருகில் ஆண் யானை ஒன்று டிரான்ஸ்பார்ம் அருகில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் காப்புக்காட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் வீரபாண்டிப்புதூர் கிராமத்தில் அருள் ஆண்டனி என்பவருக்கு சொந்தமான இடத்தில் டிரான்ஸ்பார்ம் அருகில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து வனப்பணியாளர்கள் தணிக்கை செய்ததில் யானை உயிரிழந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் மற்றும் தடாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை யானை உடல் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments are closed.