விஜய்யின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: கோவை எம்எல்ஏ கனிமொழி வரவேற்பு!

கோவை: முதலமைச்சர் விஜய்யின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு கோவை எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்கள் முதல்வர் விஜய் அறிவித்துள்ள “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” சமூக நீதி மற்றும் குழந்தைகள் நலனை முன்னிறுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத் திட்டமாகும் என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளின் பிறப்பை கொண்டாடும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்திற்கு அரசு துணை நிற்கும் மனிதநேய அணுகுமுறையின் வெளிப்பாடாகவும் இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

Advertisement

Also Read: கோவையில் ஆண் யானை மர்ம மரணம்!

மேலும், சமூக அக்கறை மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியின் மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் திகழும் என்றும், தமிழக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கிய அரசின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துவதாகவும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...