கோவை அரசு பொருட்காட்சி 2026: வ.உ.சி. (VOC) மைதானத்தில் முறையில் கோவை அரசு பொருட்காட்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கோடைகாலத்தில் வ.உ.சி மைதானத்தில் தமிழக அரசு சார்பில் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். பல்வேறு அரசுத் துறைகள் நடத்தும் இந்த பொருட்காட்சிக்கா ஆண்டுதொறும் மக்கள் காத்திருப்பார்கள்.
அதன்படி, இந்தாண்டு ஜூன் 9-ஆம் கோவை அரசு பொருட்காட்சி தொடங்க உள்ளது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ரசிக்கும் வகையில், வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அரங்குகள் மற்றும் சாகச ராட்டினங்கள் இதில் இடம்பெறுகின்றன.
Also Read: கோவையில் ஜூன் 8-ஆம் தேதி மின்தடை பகுதிகள்…
45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட 29 அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
“சின்ன வயசு ஞாபகங்களை மீண்டும் கொண்டு வரும் இடம் இதுதான்” எனக்கூறி பலரும் அரசு பொருட்காட்சிக்கு waiting என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


