எரிவாயு தட்டுப்பாடு- கோவையில் பள்ளியின் அழுத்தத்தால் மாணவனுக்கு நேர்ந்த சோகம்…

கோவை: கோவையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மரம் ஏறி விறகு உடைக்க சொன்ன கல்வி நிர்வாகத்தால் மாணவன் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

Advertisement

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பயனியர் மில்ஸ் என்ற தனியார் பள்ளி விடுதியில் சமையல் எரிவாயு காலியாகி விட்டதால், காய்ந்த மரத்தில் ஏறி 12ம் வகுப்பு படிக்கும் நந்தகுமார் என்ற மாணவனை விறகு உடைக்க சொல்லி இருக்கின்றனர்.

இதில் மாணவன் காய்ந்த மரத்தில் ஏறிய பொழுது தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனை அவசர அவசரமாக பள்ளி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Read also கோவையில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி- வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை…

Advertisement

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் பகுதியில் பயனியர் மில்ஸ் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நந்தகுமார் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை முக்கூரன் இவர் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியில் வாட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். அவரது தாயார் அங்குள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

தாயாரின் உடல்நிலை காரணமாக பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது சொந்த அருப்புக்கோட்டை.

Advertisement

இந்த நிலையைல் கடந்த வியாழக்கிழமை விடுதியில் சமையல் எரிவாயு காலியாகி விட்டதால் காலை உணவாக பிரட் வழங்கியுள்ளனர். விறகு அடுப்பில் மதிய உணவு சமைக்க அங்கிருந்த காய்ந்த மரத்தில் ஏறி மாணவன் விறகு உடைக்க சொல்லி இருக்கின்றனர்.

Read also கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர் பரிதாப பலி!

ராஜ்குமார் என்பவர் நந்தகுமார் உள்ளிட்ட சில மாணவர்களை வற்புறுத்தி காய்ந்த கிளைகளை உடைக்க மரத்தில் எறச்சொல்லியுள்ளார். காய்ந்த மரத்தில் மாணவர்கள் ஏறிய பொழுது, அதில் ஒரு கிளை உடைந்து மாணவர் நந்தகுமார் தவறி கீழே விழுந்து முதுகில் பலத்த காயமடைந்துள்ளார். 26 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் நந்தகுமாருக்கு இடுப்பு எலும்பு உடைந்துள்ளது.

விபத்து நடந்து 1 மணி நேரம் அறைக்குள் வைத்து ஐஸ்கட்டிகளை வைத்து சரிசெய்ய பார்த்துள்ளனர். அதையடுத்து மாணவருக்கு வலி அதிகமாக அங்கிருந்த காவலாளியிடம் வண்டியை வாங்கி மாணவனை அழைத்துக்கொண்டு ஜோதிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் மாணவன் விழுந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்துந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். போலிசார் இது தொடர்பாக போலிச்சர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.