கோவையில் ‘பர்பிள் பே’ பிரம்மாண்ட புதிய ஷோரூம் துவக்கம்

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ (Purple Bay, Blissful Bathrooms) தனது புதிய பிரம்மாண்ட ஷோரூமை தொடங்கியுள்ளது.

Advertisement

கோவை ஆர்.எஸ்.புரம், பாஷ்யகர்லு சாலை (மேற்கு) பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூமை, நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி இனிதே திறந்து வைத்தனர்.

புதிய இடம், புதிய அனுபவம் (New Space, New Experience) என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில், சர்வதேசத் தரம் வாய்ந்த நவீன குளியலறை வடிவமைப்புகள், பிரீமியம் ரக உபகரணங்கள், பாத் டப்கள், ஹீட் பம்ப் என்னும் நவீன தண்ணீர் சூடு செய்யும் சாதனங்கள், ஸ்டெய்லெஸ் ஸ்டீல் பைப்கள், தண்ணீர் சாப்டனர், மற்றும் வீட்டின் அழகை மேம்படுத்தும் வகையிலான பிரத்யேகக் கட்டமைப்புகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராம் சிவ பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரம்யா ராம் சிவ பிரகாஷ் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த குளியலறை அனுபவத்தை ஒரே கூரையின் கீழ் வழங்குவதே எங்களின் நோக்கம்.

Advertisement

கோவையில் பிரேத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 3 தள ஷோரூம், வாடிக்கையாளர்கள் நேரில் வருகை தரும் போது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தனர்.

இந்தத் திறப்பு விழாவில் நகரின் முக்கியத் தொழில் அதிபர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் (Architects), பொறியாளர்கள் (Engineers), உள்அலங்கார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.