கோவையில் சட்ட விரோத கள்ளச்சாராயம்- குண்டர் சட்டம் பாய்ந்தது…

கோவை: கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Advertisement

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன் (42) மற்றும் செங்காளியப்பன் (59) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்கள் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவின்படி சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கு குற்றவாளிகள் மீது குண்டர் (Bootleggers) தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Advertisement

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...