திறக்கப்பட்டது கோவை குற்றாலம்!

கோவை: கோவை குற்றாலம் இன்று மூடப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து சீராகியுள்ளதால் இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவிக்கு (Kovai Kutralam Falls) சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், சிறுவாணி அடிவார அருவிப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு வனத்துறை சார்பில் அவ்வப்போது கோவை குற்றாலத்திற்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று (10/10/2026) ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனக்கோட்டம் (Coimbatore Forest Division) சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

ஆனால், தற்போதைய நிலவரப்படி கோவை குற்றாலத்தில் நீர்வரத்து சீராகியுள்ளது. இதனால், கோவை குற்றாலத்திற்குச் செல்ல இன்று பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read: கூகுள் மேப் ரிவ்யூ செய்தால் பணம் எனக் கூறி மோசடி – கோவையில் வாலிபர் ஏமாற்றம்

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நடந்து முடிந்த இடைத்தேர்தல்- நயினார் நாகேந்திரனின் கருத்து…

கோவை: இந்த தேர்தலை ஆரோக்யமான ஜனநாயகம் என்று கூற முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு...

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...