கோவை: காய்ச்சல் காரணமாக அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை செல்வதற்காக கோவை வந்த வந்த நேரத்தில் காய்ச்சல் காரணமாக விமான நிலையம் அருகில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நாளை காலை டிஸ்சார்ஜ் செய்து மருத்துவர்கள் கூறியதால் தற்பொழுது மருத்துவமனையிலேயே ஓய்வில் உள்ளார். நாளை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





Comments are closed.