மாடலிங் – திரைத்துறை பிரச்சனையை விஜய் தீர்க்க கோவையில் எழுந்த கோரிக்கை!

கோவை: மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்குச் செல்லும் போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளன. இதனைத் தடுக்க விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் மாடலிங் துறை வல்லுநர் ஷில்பா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் வோக் மாடலிங் கம்பெனி சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கேஷுவல் ரவுண்ட், ஸ்விம் வேர் ரவுண்ட், டிரடிஷனல் ரவுண்ட், பிஸினஸ் ரவுண்ட், கேள்வி – பதில் சுற்று உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியாளர்கள் தங்களது உடை அலங்காரம், உடற்தகுதி, மேடை பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் அடுத்த கட்டமாக மாநில மற்றும் தேசிய அளவிலான அழகுப்போட்டிகளில் பங்கேற்பதற்கும், திரைத்துறையில் வாய்ப்புகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு ஆணழகன் பட்டம் வழங்கப்பட்டது.

Advertisement

இதுகுறித்து வோக் மாடலிங் நிறுவனத்தின் இயக்குநர் ஷில்பா சீதாராமன் கூறுகையில், “ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அழகுப்போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். கோவையில் இருந்து மாடலிங் துறைக்கு வருபவர்கள் குறைவாக இல்லை. ஆனால் சென்னை போன்ற சந்தை இல்லை.

Coimbatore modeling event

இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஒரு பாலமாக இருக்கும். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்குச் செல்லும் போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளன. இதனைத் தடுக்கவும், திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த இலங்கை நாட்டினர் மீட்பு

கோவை: கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் உரிய ஆவணங்களின்றிச் தங்கியிருந்த பெண் உட்பட 3 இலங்கை நாட்டினரை பிடித்த போலீசார்திருச்சி அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைப்பி வைத்தனர். கோவை வேலண்டிபாளையம் பகுதியில் நேற்று...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...