கூடலூர் நகராட்சியில் எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் கள ஆய்வு…

கோவை: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் எம்எல்ஏ சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த குடிநீர் தொட்டியினை சரிசெய்ய உத்தரவிட்டார்.

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் மேற்கொண்ட ஆய்வின் போது பள்ளியில் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்கள் பழுதடைந்து தூணின் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தது.

இதையடுத்து அசம்பாவிதம் நடக்கு முன்பாக சேதமடைந்த குடிநீர் தொட்டியினை உடனடியாக சரிசெய்ய நகராட்சி ஆனையர் மூவேந்திரனுக்கு சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் உத்தரவிட்டார்.

Advertisement

அதேபோல் திருமலை நாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சுனில் ஆனந்த் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்திருப்தை பார்த்து அதை சரி செய்து பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் ஆய்வின்போது 6 வது வார்டு விஜயா நகர் பகுதியில் சாலை அமைத்துக்கொடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்திடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் விரைவில் சாலை அமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.

Advertisement

ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழக கூடலூர் நகரச் செயலாளர் சத்யகுமார், நகர நிவாகிகள் சரவணன், ஷகிலா, பூர்ணிமா, விஜய், விக்னேஷ், வெங்கடேஷ், கவுசிக், மவுரி, அஜித் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கூடலூர் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...