அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்- EPS க்கு SPV வேண்டுகோள்…

கோவை: எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று வேலுமணி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பதவிகள் திருப்பி தரப்பட்டது குறித்தான கேள்விக்கு அந்த நாங்கள் அதிமுக தலைமைக்கு கொடுத்த கடிதத்திலேயே அனைத்தையும் தெளிவாக சொல்லி இருக்கின்றோம் என்றார்.

கட்சிக்காக உழைத்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் ஜெயலலிதா எம்ஜிஆர் காலத்தில் இருந்து உழைத்தவர்கள், எடப்பாடியாருக்காக உழைத்தவர்கள் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படவில்லை என்றார்.

Advertisement

அதனால் நான், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் பதவிகள் வேண்டாம், தொண்டராக தொடர்கின்றோம் என சொல்லி இருக்கின்றோம் என்று தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கின்றோம் எனவே அதிமுக
உறுப்பினராக தொடர்கின்றோம் என்றார்.

மகளிரணி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தான கேள்விக்கு வளர்மதி எப்பொழுதும் கூப்பிடுவார், நேற்றைய கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை ஆனால் அதற்கு முன்னரே நாங்கள் கடிதம் கொடுத்து விட்டோம். அதனால் எங்களை அழைக்கவில்லை என்றார்.

Advertisement

நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு என்றும் கட்சிக்காக எம்.ஜி்.ஆர். ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள்,
எடப்பாடிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன் என்றும் கூறினார். கடந்த நான்காம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம்.
ஆனால் கொடுக்கவில்லை என்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரை குறிப்பிட்ட அவர்களிடமே பதில் கேளுங்கள் என்றார்.

எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைந்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் என்றார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...