இன்ஸ்டாகிராம் காதலரை சந்திக்க நள்ளிரவில் காத்திருந்த மாணவி; கோவையில் மீட்ட Pink patrol

கோவை: கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியதாக கூறிய 21 வயது மாணவியை, நள்ளிரவில் சாலையோரத்தில் பாதுகாப்பாக மீட்ட பிங்க் பேட்ரோல் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிங்க் பேட்ரோல் போலீசார் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்ததை கவனித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

Also Read: கலைத்துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவச பயிற்சி- கோவை ஆட்சியரின் அறிவிப்பு…

விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திப்பதற்காக திருநெல்வேலி செல்ல காத்திருந்ததாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த மாணவியை போலீசார் மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read news: வீட்டிற்குள் செடி வளர்க்க ஆசையா?

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...