கோவையில் அரசு விடுதி மாணவிகள் கல்லூரிக்கு செல்ல சிறப்பு பேருந்து- அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைப்பு…

கோவை: சமூகநீதி விடுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு பேருந்து வசதியை அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார்.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சமூக நீதி மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்று வரும் நிலையில் நாள்தோறும் இவர்கள் கல்லூரி செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பொழுது கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்துகள் வருவதால் அந்த பேருந்துகளில் ஏறி பயணம் செய்வதற்கு சிரமங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்யும் பொழுது காலை வேலையில் கல்லூரிக்கு செல்வதற்கு தங்களுக்கென தனி பேருந்து வசதி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து தற்பொழுது அவர்களுக்கு காலை நேரத்தில் மட்டும் கவுண்டம்பாளையம் சமூக நீதி விடுதி அருகில் இருந்து அரசு கலைக் கல்லூரி செல்வதற்கான சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை இன்று அமைச்சர் சம்பத் குமார் துவக்கி வைத்தார்.

மேலும் பேருந்தில் ஏறி மாணவிகளிடம் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவிகளும் அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வெளியாகும் ஜனநாயகன்- பிரம்மாண்டமாக தயாராகி வரும் கோவை திரையரங்குகள்…

நாளை வெளியாகும் ஜனநாயகன் திரைப்படத்தை முன்னிட்டு கோவை சாந்தி திரையரங்கம் முன்பு பிரம்மாண்ட கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...