பெங்களூர் டூ கோவைக்கு புகையிலை கடத்தல்- இருவர் கைது…

கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

Advertisement

கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக போலீசார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடவள்ளி
காவல் ஆய்வாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையிலான போலீசார் வடவள்ளி கணுவாய் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது உடனே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர். அதற்குள் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் இருந்தனர் அந்த நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தனர்.

இதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார். அந்த காருக்குள் சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

உடனே காவல்துறையினர் அந்த காருக்குள் இருந்த 450 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார், தஸ்காட் என்பதும் பெங்களூரில் இருந்து கடத்தியதும் தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.

Advertisement

இது குறித்து போலீசார் கூறும் போது ; ராஜஸ்தானி சேர்ந்த வாலிபர்கள் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள ஒரு நபருக்கு கொடுக்க புகையிலை பொருட்களை கடத்திச் செல்வதாக கூறினர். எனவே அந்த நபர் யார் ? அவர்கள் எத்தனை நாட்களாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...