கோவையில் துவங்கியது UPSC தேர்வு…

கோவை: இன்று UPSC தேர்வு துவங்கிய நிலையில் கோவையில்
6,526 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யூ.பி.எஸ்.சி தேர்வு இன்று கோவையில் பல்வேறு மையங்களில் தொடங்கியது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட உயரிய மத்திய அரசு பணிகளுக்கான இந்த யூ.பி.எஸ்.சி முதற்கட்டத் தேர்வை எழுதுவதற்காக, காலை முதலே ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர்.

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

Advertisement

இந்த தேர்வில் மொத்தமாக 6,526 பேர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு கலைக்கல்லூரி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தேர்வு மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

தேர்வு மையங்களின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பலர் தங்களது கனவான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பதவியை அடைவதற்காக பல மாதங்களாக தீவிரமாக தயாராகி வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேர்வு அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

தேர்வு மையங்களுக்கு வந்திருந்த பெற்றோர்களும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
காலை நேரம் முதலே கோவையின் பல பகுதிகளில் தேர்வு சூழல் பரபரப்பாக காணப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.