முதலமைச்சரான விஜய்- கோவையில் மின்வாரிய அலுவலர்கள் கொண்டாட்டம்…

கோவை: விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றதை அக்கட்சியின் ஆதரவு மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு அக்கட்சிக்கு ஆதரவு தரும் மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

இது குறித்து பேட்டியளித்த மின்வாரிய தொழிற்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, மின்வாரிய தொழிற்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப் போலவே 200 யூனிட் இலவசம் மின்சாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்தும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மின்சாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 0-200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இலவசம், 201-400 யூனிட்டுக்கு 4.70 ரூபாய்(1 யூனிட்) மொத்தம் 940 ரூபாய், 401-500 யூனிட்டில் 100 யூனிட்டுக்கு மட்டும் 6.30 ரூபாய்(1 யூனிட்) 630ரூபாய் 500யூனிட்டு மொத்தமாக 1570 ரூபாய் என்றும் பழைய கட்டணத்தை ஓப்பிடும் போது 235 ரூபாய் மிச்சம்படுத்தப்படும் என்றார்.

மேலும் இச்சங்கம் தற்பொழுது வரை பதிவு செய்யப்படவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அண்ணாமலைக்கு தோல்வி உறுதி- அமைச்சர் அருண்ராஜ் கோவையில் பேட்டி…

கோவை: அண்ணாமலைக்கு தோல்வி நிச்சயம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்மக்கள் தீர்ப்பினை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல்...

Latest News Coimbatore

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.