கோவை: கோவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ள நிலையில் கோவஜ் மாவட்டம் முழுவதும் உள்ள 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம், சீல், ஸ்டிக்கர்ஸ், வேட்பாளர் பட்டியல்கள், அழியாத மை, சட்டப்பூர்வ படிவங்கள் மற்றும் பிற எழுதுபொருட்கள் போன்ற 110 தேர்தல் பொருட்களும் எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பொருட்களை விநியோகிப்பது, பொருட்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, அவை சரியான நேரத்தில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 3563 வாக்குச்சாவடிகள் மற்றும் 1062 வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டுள்ளன.


