சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எதிர்கொள்ள தயார்- கோவை ஆட்சியர் பேட்டி…

கோவை: எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்

Advertisement

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது பேசிய அவர், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என கூறிய அவர் அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது 182 பதற்றமான வாக்கு சாவடிகளை கண்டறிந்து மத்திய பாதுகாப்பு படையினரை நியமித்துள்ளோம் என்றார். தேர்தல் விதி மீறல்கள் குறித்து வேட்பாளர்கள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக வேட்பாளரின் புகார் குறித்தான கேள்விக்கு எந்த புகார்கள் வந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் CSR FIR பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

வெளி மாவட்ட நபர்கள் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு 48 மணி நேர SOP யை எடுத்து வருகிறோம் கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு போதிய காவல்துறையினரை நியமித்துள்ளோம் அதற்கான திட்டமிடலும் செய்துள்ளோம் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்கவில்லை.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...