கணபதியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அறிவிப்பு!

கோவை: கணபதியில் வரும் 22ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.30க்குட்பட்ட கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ள இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய்,தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெறலாம்.

மேலும், இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் சார்பில் நடைபெறும் இந்த முகாமில், மருத்துவ நிபுணர்களால் பரிசோதனைகள் செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கேட்டு கொண்டுள்ளார்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பவானி தடுப்பணை பராமரிப்பு பணிகளை கமிஷனர் ஆய்வு

கோவை பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து குடிநீர் விநியோகம் விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Video

கோவையில் அதிகாலையில் பாலை திருடும் கணவன் மனைவி- சிசிடிவி காட்சிகள்…

கோவை கோவில்மேடு பகுதியில் அதிகாலையில் கணவன் மனைவி இணைந்து பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது