செங்கோட்டையன் விவகாரம்- பாஜகவின் சித்து விளையாட்டா?- கோவையில் திருமாவளவன் எழுப்பிய கேள்வி…

கோவை: அனைத்திலும் தலையிடும் பாஜக அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் வெளியேறியதில் ஏன் தலையிடவில்லை என தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், குளிர்கால கூட்டத் தொடரில் வாக்காளர் SIR குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தவும் அவையை ஒத்தி வைப்பதற்கு பிரச்சனைகளை எழுப்புவதற்கான சூழல் இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவையை ஒத்திவைத்து அதனை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை குறிப்பிட்ட அவர் நாடு தழுவிய அளவில் 25க்கும் மேற்பட்ட பூத் லெவல் ஆபீசர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியும் இது குறித்து கடுமையாக ஒன்றிய அரசை எச்சரிக்கும் வகையில் விமர்சித்துள்ளார். எனவே எதிர்க்கட்சிகள் இது குறித்து கடுமையான வகையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பும் என நம்புவதாக தெரிவித்தார்.

இலங்கையில் புதிதாக அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஏபிபி அரசு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் அனுரதீசநாயக்கே புதிய அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவதாகவும் இந்த சூழலில் இந்திய ஒன்றிய அரசு தலையீடு செய்து புதிய அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி நிர்வாக முறையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது ஈழ தமிழர்கள் விரும்புவதாக தெரிவித்தார். இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க கூடிய வகையில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசுக்கு இதனை எடுத்து செல்வோம் என தெரிவித்தார். முதல்வரும் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

SIR வாக்காளர் பட்டியல் சீராய்வாக இருந்தால் பிரச்சனை அல்ல என்று தெரிவித்த அவர் தற்பொழுது 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எந்த ஆவணமும் தருவதற்கு தேவையில்லை ஆனால் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கூறியுள்ள 13 ஆவணங்களில் ஒரு ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்பது குடியுரிமையை சோதிக்க கூடிய ஆவணம் என்றும் எனவே அவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

CAA சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்தாமல் அதிகாரம் அற்ற ஒரு நிறுவனத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு போக்கு என்றும் இதன் மூலம் பத்து சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகித வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதனால் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார். பீகாரில் 43 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான் என தெரிவித்தார்.

நீதிமன்றங்களில் e filing முறையை வழக்கறிஞர்கள் பலரும் எதிர்த்து வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைத்தையுமே தற்பொழுது டிஜிட்டல் முறை செய்து வருகின்ற சூழலில் அந்த நடவடிக்கை நீதிமன்றத்திலும் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் உள்ள நல்லது கெட்டது குறித்து ஆய்வு செய்து சொல்ல வேண்டும் அந்த முறை அனைவராலும் எளிதாக செய்யக்கூடிய ஒன்று அல்ல எனவே அந்த முறையில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருதுவதாக தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக ஆளாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படும் போக்கு நீடித்து வருவதாகவும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் தெரிவித்த அவர் தமிழ்நாடு அரசின் நிலை குலை அமைப்பது அவர்களது நோக்கமாக உள்ளது என்றும் தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பு உணர்வை தூண்ட வேண்டும் எனபது அவர்களது நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்த அவர் இதனை மெட்ரோ ரயில் திட்டத்திலும் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை விசிக மீண்டும் கண்டிப்பாக தெரிவித்தார்.

ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அதனை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், செங்கோட்டையன் அதிமுகவில் ஒரு மூத்த தலைவர் அவர் அதிமுகவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அந்த கட்சிக்கு உகந்தது அல்ல என்றும், அவர் தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்தது அவருடைய முடிவு அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். ஆனால் அதிமுகவை இப்படி ஒரு நெருக்கடிக்கு தள்ளியதில் பாஜகவிற்கு ஒரு பங்கு இருப்பதாக தெரிவித்தார்.

செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று வந்த பிறகு என்னை அழைத்தது அமித்ஷா என்று கூறி இருக்கிறார் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் அதிமுகவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய சூழலில் இது எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்ற கேள்வி எழுவதாக தெரிவித்தார்.

பாஜகவினரால் செங்கோட்டையனுக்கும் பழனிச்சாமிக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையா? அனைத்து பிரச்சினைகளிலும் தலையிடக்கூடிய பாஜக இந்த பிரச்சனையில் ஏன் வெளிப்படையாக தலையிடவில்லை? அவர்களை சேர்த்து வைக்க ஏன் முயற்சிக்கவில்லை? அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஏன் அவர்கள் விரும்பவில்லை? அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுவதாக தெரிவித்தார். எனவே செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறியதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தான் காரணமா அல்லது பாஜகவின் சித்து விளையாடுகளில் இதுவும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என்பதை ஏற்கனவே கூறி இருக்கிறேன் என தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்விக்கு, எங்களுக்கு சொந்த சின்னம் பானை சின்னம் கிடைத்துவிட்டது என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,08,898 பேரும் பெண் வாக்காளர்கள் 14,05,246 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 532...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.