கோவையை சேர்ந்தவர்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.10 கோடி செலவில் “பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) 2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்பு தொழில்துறைகள் போன்றவற்றை கௌரவிக்க முன்மொழிந்துள்ளது.

இந்த விருதுகள், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை, தயாரிப்புகள் பசுமை, தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளர்ச்சி,, திடக்கழிவு மேலாண்மை, நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை,, பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான விருதுக் குழு (DLAC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் கல்லூரிகள் குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகள் தேர்ந்தெடுக்கும் விருதுக்கு நிரப்ப வேண்டிய வடிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) உள்ளது.

கூடுதல் தகவலுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். கோயம்புத்தூர் தெற்கு அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் 2025 பசுமை சாம்பியன் விருதுக்கான முன் மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி 20, 2026 என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விமான நிலையத்தில் இ சிகரெட், தங்கம் கைப்பற்றல்…

கோவை: ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணியிடம் தங்கம் மற்றும் மின்னணு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...