சரவணம்பட்டியில் விபசாரம்; பெண் மீட்பு! புரோக்கருக்கு வலை!

கோவை: கோவை சரவணம்பட்டியில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை மீட்ட போலீசார் புரோக்கரை வலை வீசித் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சரவணம்பட்டி போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண் ஒருவர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட புதுச்சேரியை சேர்ந்த 44 வயது பெண்ணை மீட்டு ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் விபசார புரோக்கர் கரூரை சேர்ந்த அரவிந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp