கோவை சிறையில் போக்சோ வழக்கு கைதி மரணம்!

கோவை: சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போக்சோ) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் (48). இவர் கடந்த 2017ம் ஆண்டு கூடலூர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2021ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அப்துல் நாசர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதி அடைந்து வந்தார்.

நேற்று சிறையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறை போலீசார் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.