ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா?- காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி கோவையில் பேட்டி…

கோவை: ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா? என காங்கிரஸ் கட்சியின் தரகு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

கோவை சித்ரா அருகே உள்ள தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் தரகு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றும், காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கையே அதிக சீட், ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்பது தான் என்றார். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாகவே போய்க்கொண்டு இருக்கிறது, தற்பொழுது பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இதில் ஒருமித்த கருத்து இல்லாமல் இருப்பது குறித்தான கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியில்
சில எம்எல்ஏ, எம்பிக்கள் ஆகியோருக்கு தனிப்பட்ட காரணங்கள் கருத்துக்கள் இருக்கலாம் ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

Advertisement

காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு இது தேவையா? இல்லையா? காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா? இல்லையா? காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், நலனுக்கு இது தேவையா ?இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

பிரவீன் சக்கரவர்த்தி உட்பட சிலர் பேசுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என காங்கிரஸ் எம்பி எம்.பி.கார்த்திக் சிதம்பரம் பேசியது குறித்தான கேள்விக்கு, கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள் கோரிக்கையை வைக்கலாம் காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சி எனவும் தொண்டர்கள் கோரிக்கைகள் வைக்கின்றனர் என்றார்.

Advertisement

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்து பேசினேன், அவ்வளவுதான் இரண்டு பேர் சந்திக்க கூடாதா? என்ற அவர் பிரவீன் சக்கரவர்த்திக்கு நிறைய அடையாளங்கள் இருக்கிறது, அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தேன் என தெரிவித்த அவர் தமிழகத்தில் தான் இப்படி கேட்கிறீர்கள் என கூறினார்.

தமிழக வெற்றி கழகம் குறித்து கணிப்பு தேவையில்லை என தெரிவித்த அவர்,
விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர், அது வெளிப்படையாக தெரிகிறது என தெரிவித்தார். ஆனால்
அது ஓட்டாக மாறுமா மாறாதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகிறது மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருகின்றனர், அந்த எண்ணம் தெரிகிறது என கூறிய அவர், ஒரு சக்தியாக தமிழகத்தில் உருவாகிவிட்டார் என தெரிவித்தார்.

மூன்றே கோரிக்கைகள் தான் , அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டனின் கோரிக்கை,
காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக எதிர்காலத்திற்காக கோரிக்கை எனவும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் தமிழகத்தில்
தனித்து போட்டியிடலாமே என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்த கேள்விக்கு, யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், அதற்கு பதில் சொல்ல தேவையில்லை என தெரிவித்தார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில், செவிலியர்கள் இன்று மூன்றாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...