12ம் தேதி கோவையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்…

கோவை: கோவையில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் 12ம் தேதி நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் கிழக்கு மண்டலம், வார்டு எண்.22-க்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை, சேரன் மாநகர், VKR திருமண மண்டபத்தில் 12.02.2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய்நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம். புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

Advertisement

எனவே, தமிழக அரசின் சார்பில் நடைபெறும் நலம் காக்கும் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மேற்காணும் மருத்துவப்பிரிவுகளில் உயர் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனைகள் செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை பொது மக்கள், மாணவ/மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத் தீடீர் ஆய்வு…

கோவை: கோவையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.