கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தில் 6 பேர் சாட்சியம்

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.

Advertisement

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், காதலருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி, 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.

Advertisement

இதனிடையே நேற்று, விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இதில் 4 பேர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகினர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

Advertisement

மேலும் இதுபோன்ற முக்கியச் செய்திகளுக்கு News Clouds Coimbatore ஐ பின்தொடருங்கள்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...