ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு- விவரங்கள் இதோ…

கோவை: ரயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணபிக்கவும், இணைய வழியில் படிக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

ரயில்வே தேர்வு வாரியத்தால் உதவியாளர் (தட இயந்திரம்)உதவியாளர் (Bridge)பாதை பராமரிப்பாளர் (குழு IV)உதவியாளர் (Pway)உதவியாளர் (TRD) உதவி லோகோ ஷெட் (மின்சாரம்)உதவியாளர் செயல்பாடுகள் (Electrical) உதவியாளர் (TL & AC)உதவியாளர் (C & W)பாயிண்ட்ஸ்மேன் B மற்றும் உதவியாளர் (S & T) ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 22195 காலிப்பணியிடங்களுக்கு 02.03.2025 வரை விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகப்படியாக 33 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது or படித்தவர்கள் இத்தேர்வுக்கு http://www.rrbcdg.gov.in/ விண்ணப்பிக்கலாம்.

https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் வழியாக இப்போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 18.02.2026 முதல் தொடங்கவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடைபெறவுள்ளது.

Advertisement

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சிறு தேர்வுகள், மாதிரித்தேர்வுகள் ஆகியவை நடத்தப்படவுள்ளது. இந்த அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு பயிற்சிபெரும் மாணவர்களுக்காக 5000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தளத்தில் போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இணைய வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

RRB GROUP D தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கோயம்புத்தூர், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...