கோவை: கோவையில் குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப் 2 நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகர் டவுன்ஹால் பகுதியில் உள்ள செயின்ட் மைக்கல்ஸ் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் (தொகுதி-II பணிகள்) 22.02.2026 முற்பகல் 09.30 முதல் 12.30 வரை Group-II Main Examination Descriptive Type கோயம்புத்தூர் மாவட்டத்தில் 103 தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தனி ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்வு மையத்தின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், தேர்வர்கள் எளிதாக செல்லும் பொருட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேர்வு மையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் (May I Help You) TNPSC சிறப்பு உதவி மையம் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம், கோயம்புத்தூர் மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு 0422-2301114, 0422-2301115, 0422-2301116, 0422-23009700, 9498181213, 94425 01929, 8825772866
ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கைப்பேசி, மின்னணு கடிகாரம், கால்குலேட்டர் போன்ற மின்னணு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் நுழைவு சீட்டுடன் செல்லவும் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

