வீட்டில் அரசியல் பேசுங்கள்- கோவை வந்த உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்…

கோவை: வீட்டில் அரசியல் பேசுங்கள் என இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கணியூர் சுங்கசாவடி அருகே திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் 50,000 க்கும் மேற்பட்ட இளைஞரணியினர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

முன்னதாக நிகழ்ச்சிகு வருகை புரிந்த அவர் கூட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்டு இருந்த
ரேம் வாக்கில் நடத்தபடி இளைஞரணியினரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் உரையாற்றிய அவர் மேற்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதியில் இருந்து 80 ஆயிரம் பேர் இங்கு வந்துள்ளீர்கள்
வெஸ்ட்லயும் திமுக தான் பெஸ்ட் என்பதற்கு நீங்கள் திரண்டு இருப்பதே சாட்சி என தெரிவித்தார்.

தமிழகத்தில் எத்தனை பூத் இருக்கிறது என தெரியாமல் இப்போதுதான் சிலர் கணக்கெடுத்து கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
நமது திமுக இளைஞரணியில்
5 லட்சம் நிர்வாகிகள் ,
50 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்
கழகத்தின் ராணுவம் என இளைஞரணியை தலைவர் கூறுவார் என தெரிவித்தார்.

பாஜகவிற்கு எதிரான ஜனநாயக போரை ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என பிற தலைவர்கள் நினைக்கின்றனர் என்றார். இந்த மாதம் மகளிர் உரிமை தொகை சீக்கிரமாக கொடுத்து சர்ப்பரைஸ் கொடுத்தார் எதிர்கட்சிக்கு ஷாக் கொடுத்தார் முதல்வர்
பா.ஜ.க அடிமை கூட்டம் நீதிமன்றம் மூலம் மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயன்றனர் அதை தெரிந்த கொண்ட முதல்வர் முன்கூட்டியே பணத்தை அளித்துவிட்டார் என தெரிவித்தார் .

11.19% வளர்ச்சியை இந்த மாநிலம் பெற்று இருக்கின்றது தமிழகத்திற்கு
மோடியும் ,அமித்ஷாவும் மட்டும்தான் வருவார்கள் ஆனால் நிதி எதுவும் வராது என விமர்சித்தார். மத்திய பட்ஜெட்டை படிக்கும் முன்பே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பாராட்டுகிறார் என்றும், முரட்டு அடிமையாக மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி மாறிவிட்டார் எனவும் தெரிவித்தார்.
2026 ல் அதிமுகவை பா.ஜ.கவிடம் மொத்தமாக விற்று விட்டு,சுயநலத்திற்காக அதிமுகவை அழிவு பாதையில் அழைத்து சென்று விட்டார் என தெரிவித்தார்.

நாங்கள் ED க்கும். பயப்பட மாட்டோம்,
மோடிக்கும் பயப்பட மாட்டோம், மோடியோட டாடி வந்தாலும் பயப்பட மாட்டோம் என தெரிவித்தார். மகளிருக்கான விடியல் பயண திட்டத்தை மோடி விமர்சனம் செய்கின்றார் , மகளிர் விடியல் பயணத்தை ரத்து செய்ய மோடி விமர்சனம் செய்கின்றார் மோடிக்கு ஏற்ற அடிமையாக எடப்பாடி இருக்கின்றார் எனவும் விமர்சித்தார்.

ஸ்டாலின் இருக்கும் வரை பா.ஜ.க கலவர அரசியலை உள்ளே விட மாட்டார் அமித்ஷா இங்கு வந்து பெயின்ட் அடிக்கின்றார் ,
எவ்வளவு பெயின்ட் அடித்தாலும் தமிழக மக்கள் உங்கள் முகத்தில் கரியை தான் பூசுவார்கள் என தெரிவித்தார். இளைஞரணியினர் வீட்டில் உள்ளவர்களுடன் அரசியல் பேசுங்கள்,
இளைரணி நிர்வாகிகள் ஓவ்வொரு வீடாக போய் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கின்றது,
இது ஜனநாயாக போர் , டெல்லிக்கு எப்போதும் தமிழ்நாடு அவுட் ஆப் கன்ட்ரோல்தான் எனவும் தெரிவித்தார். இந்த தேர்தலில்
இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தலைவர்களிடம் கேட்டு இருக்கின்றேன் என்றார்.


இன்று பல பேர் நம்மை அழிக்க கனவு காண்கின்றனர் , ஆனால் ஆயிரம் உடன்பிறப்பு இருக்கும் வரை நாம் வளர்ந்து கொண்டே இருப்போம், யாரும் அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

உதய சூரியன் ரத்ததில் உரிய சின்னம், எத்தனை பேர் வந்தாலும் அழிக்க முடியாது என தெரிவித்த அவர், வெல்வோம் 200, படைப்போம் வரலாறு எனவும், 200 அதிகமான தொகுதிகளில் மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

10 தோல்வி எடப்பாடியும், மொத்த தோல்வி மோடியையும் இந்த தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும் எனவும், இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராக அமர வேகமாக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video