இனி நினைத்தபடியெல்லாம் கடன் வசூலிக்க முடியாது; நிதி நிறுவனங்களுக்கு Reserve Bank கிடுக்கிப்பிடி!

கோவை: கடன் வாங்கியவர்களை வசூல் முகவர்கள் மிரட்டுதல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல் போன்ற புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர்களை பாதுகாக்க Indian Reserve Bank புதிய கடுமையான விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement

பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கும் போது, சில சூழ்நிலைகளால், அந்த பணத்தை குறித்த நேரத்தில் சம்பந்தப்பட்டவரால் செலுத்த முடியாமல் போகிறது.

இதற்கு பல் நிதி நிறுவனங்கள்ள் வட்டி மேல் வட்டி போடுவது மட்டுமல்லாமல், கடன் வாங்கியவரை மிரட்டுவதும், பொது இடத்தில் அவமானப்படுத்தும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

மனசாட்சியே இல்லாமல் பொதுமக்களை அசிங்கப்படுத்தும் இது போன்ற நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், சிலர் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

Advertisement

இதனிடையே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. அதன்படி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் கொடுத்தவரிடம் அது குறித்து பேச வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிகள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக உள்ளன. அந்த விதிகள் பின்வருமாறு:-

கடன் வாங்கியவர்களிடம், வசூல் முகவர் நியமனம் குறித்து வங்கி முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், வசூல் முகவர்களின் பட்டியல் வங்கியின் கிளைகள் மற்றும் இணையதளங்களில் (website) மற்றும் ஆப்-ல் (app) வெளியிடப்பட வேண்டும்.

Advertisement

வசூல் முகவர்கள் மேற்கொள்ளும் அனைத்து அழைப்புகளும் (Recovery calls) பதிவு செய்யப்பட வேண்டும்.

கடன் வாங்கியவர் புகார் அளித்திருந்தால், அந்த புகாருக்கு தீர்வு காணும் வரை வசூல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். ஆனால், ஆதாரமற்ற புகார் என்று வங்கி உறுதி செய்தால், வசூல் நடவடிக்கைகள் தொடரலாம்.

மேலும், கடன் வசூல் தொடர்பாக பேசும் போது கடன் வாங்கியவரின் (Borrower) தனியுரிமையை (privacy) மதிக்க வேண்டும். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அல்லது அண்டை வீட்டாரிடம் தொடர்பு கொண்டு அவமானப்படுத்தக் கூடாது.

வசூல் நடவடிக்கைகள் மரியாதையுடனும் நாகரிகமாகவும் இருக்க வேண்டும்.

கடன் திருப்பிச் செலுத்த சிரமம் உள்ளவர்களை அடையாளம் காணும் அமைப்பு இருக்க வேண்டும். திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

கடன் வாங்கியவரின் விவரங்களை சம்மந்தப்பட்ட வங்கி recovery agents-க்கு தேவையான அளவில் மட்டுமே பகிர வேண்டும்.

வங்கிகள் சட்டப்படி மட்டுமே recovery நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகே மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, வசூல் முகவர்கள் (Recovery agent) கடன் வாங்கியவர்களை (Borrower) காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தை மீறி அழைப்பது அல்லது தொந்தரவு செய்வது விதிமீறலாக கருதப்படும்.

அதேபோல், குடும்ப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகள், திருமணம் போன்ற நேரங்களில் வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது.

மைக்ரோ பைனான்ஸ் கடன்களுக்கு, முன்கூட்டியே ஒப்புக்கொண்ட இடத்தில் மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.

இந்த விதிகளை மீறி வசூல் முகவர்கள் மிரட்டல், அவமானப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்பிஐ எச்சரித்துள்ளது.

Recovery target அல்லது incentive காரணமாக மிரட்டல் போன்ற தவறான முறைகள் பயன்படுத்தக்கூடாது.

கடனை திரும்பபெற்றவுடன் receipt-டை வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் மூலம் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, மனிதநேயமான வசூல் நடைமுறைகள் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடனால் மனஉளைச்சலில் இருக்கும் உங்கள் சொந்தங்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...