கோவை: மதுபானத்தின் பெயரை கொண்டு ஊர் பெயரை மாற்றுங்கள் என நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவையில் கூடுதலாக போதை மறுவாழ்வு மையத்தில் திறக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் ஒரே ஊரில் பல்வேறு மதுபான கடைகள் இருப்பதாகவும் இதனால் பலரும் மது பழக்கத்திற்கு உள்ளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்வதாகவும்,
எனவே போதை மறுவாழ்வு மையத்தை அதிகம் உருவாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பேரறிவாளன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மது அருந்துபவர்களால் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள், முதியவர்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர்.
கோவையில் புலியகுளம், இராமநாதபுரம் பகுதியில் அதிகமான மதுபானக்கடைகள் இருப்பதால் புலியகுளம் என்ற ஊர் பெயரை சாராயக்குளம் என்றும் இராமநாதபுரம் என்ற ஊர் பெயரை சாராயபுரம் என மாற்றம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

