தமிழ்நாட்டிற்கு Single Party Government தான் சரியாக இருக்கும்- கோவையில் ஈஸ்வரன் பேட்டி…

கோவை: Single Party Government தான் சரியாக இருக்கும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பேச்சு வார்த்தைக்காக நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது நாளை அங்கு செல்கிறோம் என்றார். அதிக கட்சிகள் இருப்பதால் கூட்டணிகள் குறையும் என்று தகவல்கள் வெளியானது குறித்த கேள்விக்கு திமுகவினர் அவ்வாறு கூறியது போன்று தெரியவில்லை என்று பதில் அளித்தார். எவ்வளவு தொகுதிகள் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு நாங்கள் முடிவு செய்துவிட்டு அறிவிக்கிறோம் என்று பதில் அளித்தார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்தான கேள்விக்கு- Stable Government முக்கியம் அது இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது Stable Government முக்கிய்ம் ஆனால் அந்தந்த சூழல்தான் அதனை முடிவு செய்யும் Single Party Government ஆக இருந்தால் Stable ஆக இருக்கலாம் வளர்ச்சி என்பது தான் முக்கியம் மற்ற எண்ணங்கள் தான் இருக்கக் கூடாது என்றார்.

Advertisement

கூட்டணி ஆட்சி என்பதற்கு அதிமுகவின் பலவீனம் காரணம் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு- அதை அப்படி கூற முடியாது அந்தந்த தேர்தலில் பொழுது இந்த வார்த்தை வரக்கூடும், புதிய கட்சிகள் வருவதால் இந்த வார்த்தை தற்பொழுது அதிகமாக பேசப்படுகிறது, அனைவரையும் பங்காளிகள் ஆக்கிக் கொள்வேன் என்பதால் தற்பொழுது இது அதிகமாக பேசப்படுகிறது என பதிலளித்தார்.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்தான கேள்விக்கு- எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை கொடுப்பார்கள், இந்த ஆட்சியால் மக்கள் எந்த அளவு பயனடைந்துள்ளார்கள் அதனை தெரிந்து கொண்டு அதே வழியில் எதையாவது அறிவிக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள் என்றார்.

Advertisement

தற்பொழுது கூட எங்கள் கூட்டணியில் ஐந்தாயிரம் ரூபாய் மகளிர்க்கு கொடுக்கப்பட்டுள்ளது அதனை நாங்கள் தேர்தலின் பொழுது தெரிவிக்கவில்லை, கடந்த தேர்தலில் கூறியதை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் எனவே எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

கல்லாப்பெட்டி கட்சி என்று பலரும் விமர்சிப்பது குறித்தான கேள்விக்கு தேர்தல் நேரத்தில் அனைவரும் இதுபோன்று பேசுவது தான் அவர்கள் மீது உள்ள தவறுகள் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக பேசுகிறார்கள் என பதில் அளித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...