கோவை: கோவையில் காந்தி நினைவகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
கோவையில் பல்வேறு நிகழ்விற்காக வருகை புரிந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போத்தனூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்திற்கு சென்றார்.
ஜி.டி.நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் ஜிடி நாயுடு குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.
1934-இல் காந்தியடிகள் கோவை போத்தனூரில் ஜி.டி. நாயுடு குடும்பத்தின் இல்லத்தில் தங்கி இருந்தததை தொடர்ந்து அந்த இல்லத்தை புதுப்பித்து காந்தி நினைவு அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர்.
2022 ம் ஆண்டு அக்டோபர் 2 ம்தேதி இந்த காந்தி நினைவகம் திறக்கப்பட்டது.

இங்கு மகாத்மா காந்தியின் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் , ஆவணங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக நினைவக வளாகத்தில் இருந்த காந்தியின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மாணவிகளின் பஜனை பாடல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். இந்த நிகழ்வின் போது ஜி.டி நாயுடுவின் மகன் ஜி.டி கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

