கோவையில் கோடை மழை வரப்போகுது மக்களே!

கோவை: கோவையில் இந்த வாரம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

கோவையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு பின்வருமாறு:-

மார்ச் 15 (ஞாயிற்றுக்கிழமை)

கோவையில் இன்று குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 35 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக உணரப்படும்.

மார்ச் 16 (திங்கட்கிழமை)

கோவையில் நாளை குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 35 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. லேசான மேகமூட்டம் இருக்கும்.

Advertisement

மார்ச் 17 (செவ்வாய்க்கிழமை)

கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலை குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 18 (புதன்கிழமை)

வரும் புதன்கிழமை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகலாம்.

Advertisement

மார்ச் 19 (வியாழக்கிழமை)

வியாழனன்று கோவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலை குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20 (வெள்ளிக்கிழமை)

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மழைக்கு வாய்ப்பு இல்லை. அன்றைய தினம் குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 35 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

வானிலை கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. அவ்வாறு மாற்றங்களை வானிலை மையம் அறிவிக்கும் போது நமது நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் தளத்தில் நாங்கள் பதிவிடுகிறோம். இணைந்திருங்கள் வாசகர்களே.

இந்த வானிலை முன்னறிவிப்பை உங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...