கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை மாநகர் வடவள்ளி பகுதியில் ஆனந்த் மொபைல் என்ற கடை உள்ளது. இந்த கடைக்கு 13 ம் தேதி மொபைல் வாங்க வந்த இளைஞர் ஒருவர், பல்வேறு மொபைல்கள் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது திடீரென அந்த இளைஞர் ஒரு செல்போனை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். வெளியில் இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த அவரது நண்பருடன் தப்பி சென்றுள்ளார். இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் மொபைல் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

கோவையில் இத்தனை அருவிகளா..? கோடை விடுமுறையில் மிஸ் பண்ணிடாதீங்க..

இந்நிலையில் செல்போனை திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், திருட்டில் ஈடுபட்டு தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அரசுப் பள்ளிக்கு உயரழுத்த வாஷர் இயந்திரம் வழங்கிய ELCE மெடிக்கல் பவுண்டேஷன்

ELCE மெடிக்கல் பவுண்டேஷன் சார்பில் கோடேபாளையம் அரசு பள்ளிக்கு 11வது உயரழுத்த வாஷர் இயந்திரம் வழங்கப்பட்டது.

Video

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேம்பாலத்தில் நடத்து வந்த அண்ணாமலை- வைரல் வீடியோ காட்சிகள்…

கோவை: ஆர்ப்பாட்டத்திற்கு ஜிடி மேம்பாலத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணமலை நடந்து வந்தார். கோவையில் NDA கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்தபோது GD பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாஜக மாநில முன்னாள்...