கதையை கேட்டு சூட்டிங்கை தொடங்க சொன்ன விஜய், ஆனால் கடைசியில் அந்த கதை சூர்யாவுக்கு கைமாறியுள்ளது.
கவலையில் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய், தற்போது சினிமாவில் இருந்து அரசியலில் குதித்துள்ளார். இனி அவரை திரையில் காண முடியாது என ரசிகர்கள் சோகத்தில் இருந்து வரும் நிலையில், அவர் நடித்த ஜனநாயகன் படமும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கவுந்து போன கப்பல் போல கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், விஜய்க்கு போன படம் கடைசியில் கைமாறி நடிகர் சூர்யாவுக்கு போயுள்ளது. அது எந்த படம் தெரியுமா?

நடிகர் சூர்யா முன்னணி நடிகராக உள்ள நிலையில், கடைசியில் அவருக்கு ஹிட் கொடுத்த படம் என்றால் ஜெய் பீம் மட்டும்தான்,. ஆனால் அந்த படத்தை அவருடைய வெற்றி என முழுமையாக கொண்டாட முடியாது.
இதனால் சமீப காலமாக வெற்றி கனியை எட்ட முடியாமல் சிக்கி தவித்து வருகிறார் சூர்யா. தற்போது அவருக்கு ஏராளமான படங்கள் கைவசம் இருந்தாலும், கருப்பு படம் திருப்புமுனையை ஏற்படுத்துமா என ரசிகர்கள் காத்துள்ளனர்.
சூர்யா ரசிகர்கள் உற்சாகம்
ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படம் அறிவித்து பல மாதங்கள் ஆகியும் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே உள்ளது. சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக பின்னணி இசையில் சாய் மிரட்டியுள்ளார். இதனால் கண்டிப்பாக இந்த படம் ஹிட் என ரசிகர்கள் மார்த்தட்டி வருகின்றனர்.

இதனிடையே இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி சமீபத்திய பேட்டியில் கூறும்போது,கருப்பு படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் கூறினேன்.
ஓகே சொன்ன விஜய்
அவரும் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆகி விட்டார். ல் இந்த படத்துக்கான கதையை எழுதினேன், கதையில் மிகப்பெரிய ஐடியா உள்ளதால் நிச்சயம் பெரிய ஹீரோ நடித்தால் தான் நன்றாக இருக்கும் என விஜய்யிடம் கூறினேன்.
கதையை கேட்ட உடனே, அவர் சூட்டிங் எப்போது ஆரம்பிக்கலாம் என கேட்டார். என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் பண்ண வேண்டும் என அவர் சொல்ல, நான் இன்னும் நேரம் வேண்டும் என கேட்டேன்.

ஆனால் காலம் அதற்குள் மாறிவிட்டது. சினிமாவை விட்டு அரசியலுக்கு போகிறேன் என விஜய் அறிவித்துவிட்டதால் அது நடக்காமல் போய்விட்டது.
கைமாறிய கருப்பு
பின்னர் தான் இந்த கதையில் சில மாற்றம் செய்து, சூர்யாவுக்கு சொல்லி ஓகே வாங்கினேன் என அவர் ஓபனாக கூறியுள்ளார். இதைக் கேட்ட சினிமா விமர்சகர்கள், கடைசி படமாக விஜய் இந்த படத்தை தேர்வு செய்திருக்கலாம் என விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

