பேருந்தில் பயணிக்கும் மக்களே கவனம்… கோவையில் பரிதாபம்!

கோவை: பேருந்திற்குள் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை மாநகர் கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி காமாட்சி(62). இவர் இன்று காலை S17 எண் கொண்ட தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

பேருந்தில் முன் பக்கமாக இருக்கைகள் காலியாக இருந்ததால் அங்கு அமருவதற்காக மூதாட்டி பேருந்திற்குள் நடந்து வரும் பொழுது பேருந்து வேகமாக இயக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் நிலைதடுமாறிய மூதாட்டி கம்பியை பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக முன்பக்க கதவு வழியாக பேருந்திற்குள் இருந்து வெளியே விழுந்தார். காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...