உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெற செய்வேன்- கோவை வேட்பாளர் செந்தில்பாலாஜி சபதம்…

கோவை: உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெற செய்வேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, காந்திபுரம் பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவதற்கான பணிகளை நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தொடங்கி விட்டோம் என்றார். வீடுதோறும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்தல், பல்வேறு சிறப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்து வருகிறோம் என்றும் இதன் மூலம் மீண்டும் தமிழகத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உறுதியுடன் மக்கள் உள்ளனர் என்றார்.

Read News: துணையை காப்பாற்ற சண்டை போட்ட GENTLEMAN.. பற்ற வைத்த திரிஷா!

நான் கடந்த 2006ம் ஆண்டு முதல் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த நிலையில், எங்கள் கழகத் தலைவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், கடந்த தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், இந்த முறை மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார்.

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார் என கருத்துக்கு பிறகு தோல்வி அடைவேன் என்றா சொல்வார்? தெற்குத் தொகுதியில் மொத்த வாக்காளர்களே 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் உள்ளனர். பிறகு எப்படி 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்? கடந்த தேர்தலில் அவர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிலையில், தற்போது அவர்கள் கட்சியின் வளர்ச்சி என்ன? எத்தனை பேர் அக்கட்சியில் இணைந்துள்ளனர். நானும் அவரைப்போல் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன் என்று சொல்லலாம் என்றார்.

கடந்த தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் ஆயிரம் முதல் 2000 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது என்றும் அதன் பிறகு அவர்கள் வளர்ச்சி அடைந்துள்ளனரா? புதிய தொண்டர்கள் இணைந்துள்ளனரா? என்பதை நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.
அண்ணா திமுகவின் கோட்டை என கூறப்பட்ட கோவையில், உள்ளாட்சி தேர்தலிலேயே நாம் மாற்றத்தை கண்டோம். அந்த வெற்றி, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றும் ஏர்போர்ட் விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கப்பட்டது. மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. செம்மொழி பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

தங்க நகை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கான தனிப்பட்ட பூங்கா அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறான பல வளர்ச்சி திட்டங்களை எங்கள் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை மாநகரில் ரூ.8,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

விஜய் எந்த தொகுதியில் போட்டி? கிழிச்சு தொங்க விடறேன்.. ஜூலி காட்டம்!

யார் போட்டியிட்டாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்களே தீர்மானிப்பார்கள். நாங்கள் எங்கள் முதல்வரின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்றார்.

கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். மொத்த வாக்கு எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரம் மட்டுமே, தற்போதைய நிலவரத்தை உண்மையாக பேச வேண்டும். இப்போது அவர்கள் கட்சி எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை மதிப்பிட வேண்டும். நானும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறலாம். ஆனால் நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை அதற்காக இங்கு வரவில்லை என தெரிவித்தார்.

முதல்வரின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதை வாக்குகளாக மாற்றி, உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெறச் செய்வேன் என்றும் நாளை மாலை முதல் நடைப்பயண பிரச்சாரத்தை தொடங்குகிறேன். புலியகுளம் பகுதியில் இருந்து எனது பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றார்.

Read News: மேளதாள ஊர்வலத்துடன் வேட்புமனு தாக்கல்; கவுண்டம்பாளையத்தில் நாதக வேட்பாளர் பரபரப்பு


கோவை பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய பம்ப்செட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி வழங்கியுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கும், கோவை மாவட்ட பம்ப்செட் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்றார். இந்த அறிவிப்பை அதற்கான முக்கியமான முன்னெடுப்பாகவே பார்க்கிறேன் எனவும் கூறினார்.

கரூரில் தோல்வி பயத்தால் கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன் என்ற அதிமுக வேட்பாளர் விமர்சனத்திற்கு, அவர் ஏன் தெற்கிலிருந்து கோவை வடக்கு தொகுதிக்கு சென்றார் என்பதையும் கேட்க வேண்டும். அங்கு அவர்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதையும் பார்க்க வேண்டும் என்றார்.

தேர்தல் களத்தில் நான் ஒருபோதும் பயந்ததில்லை, பின்னோக்கி சென்றதுமில்லை. அரவக்குறிச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் பணியாற்றியதைப் போலவே, கோவையிலும் அரசு மற்றும் கட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். கோவை மக்களும் என்னை சொந்த ஊர் மக்களைப் போல அன்புடன் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.

கல்லீரலை குணப்படுத்தும் பானங்கள்

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Make In India திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது- கோவையில் கனிமொழி பிரச்சாரம்…

கோவை: Make In India வை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை கேஸ்க்கு வந்திருக்காது என கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி Make In India திட்டத்தை செய்திருந்தால் கேஸ்க்கு இந்த அளவிற்கான ஒரு...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...