கோவை மருத்துவர் வித்யா ராஜனுக்கு மருத்துவ சேவை விருது!

கோவை: கோயம்புத்தூர் மில்லேனியம் ரோட்டரி கிளப் சார்பில் கோவை எல்சி மருத்துவமனையின் மருத்துவர் வித்யா ராஜனுக்கு சிறப்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது.

காந்திபுரம் எல்சி மருத்துவமனையின் மயக்கவியல் துறை நிபுணராக மருத்துவர் வித்யா ராஜன் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே கோயம்புத்தூர் மில்லேனியம் ரோட்டரி கிளப் சார்பில் கோஸ்மோபாலிடன் கிளப்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் வித்யா ராஜனுக்கு சிறப்பு மருத்துவ சேவை (Distinguished Medical Professional Award) விருது வழங்கப்பட்டது.

Also Read: தவெக வேட்பாளர்கள்- விஜயை விமர்சித்த எஸ்.பி.வேலுமணி

மருத்துவத் துறையில் வித்யா ராஜனின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, மனிதநேய பணி மற்றும் நோயாளி சேவையில் காட்டிய அக்கறையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Doctor Vidhya Rajan award

இந்த விருதினை கோவை விமானப்படை குரூப் கேப்டன் ராகேஷ் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் செபி செபாஸ்டியன், ராஜேஷ் குமார், வரதராஜன், ராமநாதன், யுவராஜ், எல்சி மருத்துவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ரோட்டரி உறுப்பினர்கள், மருத்துவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு வித்யா ராஜனைப் பாராட்டினர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ‘Jungle Jam’ கொண்டாட்டம்; குழந்தைகளே ரெடியா இருங்க!

கோவையில் குழந்தைகளுக்கான ‘Jungle Jam’ நிகழ்ச்சி ஏப்ரல் 17 முதல் ஃபன் ரிபப்ளிக் மாலில் தொடங்கி, கற்றலும் விளையாட்டும் இணைந்த அனுபவத்தை வழங்குகிறது.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...