நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு கோவை வடக்கு தொகுதி தே.ஜ கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு…

கோவை: பெரும் எதிர்பார்ப்பை அடுத்து கோவை வடக்கு தொகுதி தே.ஜ கூட்டணியில் வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டனர்.

எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கட்சி வேட்பாளர்கள் நீண்ட நாட்களாக அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் அந்தக் கட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அத்தொகுதி மக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்ததால் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அந்த தொகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர்.

Advertisement

இறுதியாக இன்று பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த நிலையில் தற்போது கோவை வடக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் கோவை வடக்கு தொகுதியில் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் முழுமை பெற்றுள்ளனர். அதன்படி கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் துரை செந்தமிழ் செல்வன், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் நர்மதா, தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் சம்பத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...