வானதி சீனிவாசனுக்கு கோவை தவெக வேட்பாளர் அட்வைஸ்…

கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு தவெக வேட்பாளர் அட்வைஸ் செய்துள்ளார்.

கோவை வடக்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர் சம்பத்குமார் வடவள்ளி சுற்றுப்பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் மக்கள் அவருக்கு ஆராத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அதனிடையே ஒரு குடும்பத்தார் அவரை வீட்டிற்குள் அழைத்து கடந்த காலத்தில் இரண்டு கட்சிகளுக்கும் (திமுக, அதிமுக) என மாறி மாறி வாக்களித்து சலிப்படைந்து விட்டதாகவும் தங்கள் குழந்தைகள் எங்களை தவெக விற்கு வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்துவதாக கூறினர்.

முல்லை நகர் பகுதியில் மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி மனு அளித்தனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சம்பத்குமார் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று வந்தவுடன் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அவர், நம்மை மேலே வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு இதர கட்சிகள் செயல்படுவதாக தெரிவித்தார். தலைவர் தளபதி விஜய் அவர்கள் இலவசங்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார் அவர்களுக்கு வாக்கு விழுகாது என்றும் தெரிவித்தார்.

Read news: திருமணத்தை நிறுத்திய உறவினருக்கு தர்ம அடி கொடுத்த வாலிபர்…!

முன்பெல்லாம் வீட்டில் அரசியல் பேச மாட்டார்கள் ஆனால் தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்தது முதல் அனைவரும் தமிழக வெற்றி கழகம் குறித்தும் விஜய் குறித்தும் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்தார். கல்லூரி மாணவ மாணவிகளும் தமிழக வெற்றிக் கழகம் குறித்து பேசத் துவங்கி விட்டதாக தெரிவித்தார்.

அரசியலும் வாழ்க்கையும் வேறில்லை இரண்டும் ஒன்றுதான் என்று மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் எனவே பொய் வாக்குறுதிகளை எல்லாம் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார். தற்பொழுது வரை ஜெய்த்த கட்சிகள் எல்லாம் எந்தெந்த துறைகளில் வருமானம் வருமோ அது அனைத்தையும் அந்த குடும்பம் மட்டுமே பெறும் ஆனால் அனைத்தையும் விட்டுவிட்டு வருபவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் என்று தெரிவித்தார்.

அப்பா என்று முதலமைச்சர் ஸ்டாலினை பெயருக்கு கூறாமல் விமர்சித்த சம்பத்குமார், அப்பாவின் கடமை என்னவென்றால் அவர்களின் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அப்பா தற்பொழுது எத்தனை பெண் குழந்தைகளின் வாழ்க்கை நாசமாகி கொண்டிருக்கிறது பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்று கூறிய அவர் இரண்டு வயது குழந்தைக்கும் 60 வயது பாட்டிற்கும் கூட உத்தரவாதம் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை எப்படி இருக்கும் பொழுது எப்படி மனசு கூசாமல் அப்பா என்று கூறிக் கொள்கிறீர்கள் உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று ஆவேசமாக தெரிவித்தார். எனவே உங்களின் பொய்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டுவோம் என்று தெரிவித்தார். நீட் தேர்வு குறித்து திமுக பேசியதை குறிப்பிட சம்பத்குமார் தற்போது பிம்பிளிக்கி பிளாப்பி என கூறிவிட்டதாகவும் விமர்சித்தார்.

Read news: Coimbatore accident News: கணவன் கண்முன் பரிதாபம்; லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி மனைவி பலி

தமிழகத்தை சோழர்கள் பாண்டியர்கள் சீனாவில் உள்ள ஒரு வம்சத்தினர் ஆண்டு வந்ததாக குறிப்பிட்ட அவர், அந்த வரிசையில் இவர்களும் வந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல என்று திமுகவை விமர்சித்த அவர் தமிழ்நாட்டை திமுகவினர் அவர்களது சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வாறு நினைத்தால் நல்லது செய்தால் கூட பரவாயில்லை என்று கூறினார். திராவிட மாடல் 1.O வே சந்தி சிரிக்கும் பொழுது 2.O வேறயா என காட்டமாக பேசினார். மேலும் எங்கள் கட்சியில் திரண்டவர்கள் யாரும் காசுக்காக திரளவில்லை என்றும் உங்களால் காசு கொடுக்காமல் கூட்டத்தை கூட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார்.

கோவையின் தங்க மகள் என வானதி சீனிவாசனை குறிப்பிட்டு பேசிய சம்பத்குமார், வானதி சீனிவாசன் ஏற்கனவே தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் ஆனால் அந்த தொகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் எனவே அந்த தொகுதி மக்களே அவர் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதாகவும் விமர்சித்தார்.

வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட்டாலும் அங்குள்ள தெற்கு தொகுதி மக்கள் இங்குள்ள மக்களிடம் அவர் எதுவுமே செய்ய மாட்டார் என்று கூறிவிட்டனர் என்றும் தெரிவித்தார். தெற்கு தொகுதியில் நீங்கள் மக்கள் பணிகளை செய்து இருந்தால் மக்களே உங்களுக்காக போஸ்டர்கள் ஒட்டி இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். நீங்கள் முயற்சி செய்தாலும் மக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் உங்கள் பகல் கனவு பகல் கனவாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் வானதி சீனிவாசனுக்கு ஒரு அட்வைஸ் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்த சம்பத்குமார், பிரதமர் மோடியை சந்தித்தால் ஏதோ ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் கோவை மக்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்க வேண்டாம் கோவை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் உங்களை நம்புவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...