சடங்கு போல் நடைபெற்ற தேர்தல்- ஆணையத்தை மறுசீரமைக்க வலியுறுத்திய கிருஷ்ணசாமி…

கோவை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சடங்கு போல நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 61 சட்டமன்ற தொகுதியில் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள், அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பது ஆசை வார்த்தை, அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், ஆனால் இந்த தேர்தல் அவ்வாறு நடைபெறவில்லை என்று கூறிய அவர் தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகமா? பண நாயகமா? என்று கேட்கும் விதத்தில் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது என்றார்.

தான் போட்டியிட்ட ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது ஆனால் தேர்தல் ஆணையம் பணபட்டுவாடா பற்றி கண்டு கொள்ளவில்லை. ஜனநாயகத்திற்கு விரோதமாக 19-23 தேதி வரை மித மிஞ்சிய அளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்

Advertisement

பணபட்டுவாடாவை தேர்தலின் ஒரு அங்கம் என தேர்தல் ஆணையம் விட்டுவிட்டதா? என தெரியவில்லை என்று விமர்சித்த அவர், 22ம் தேதி இரவு வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுத்துள்ளார்கள் என்றார். இப்படி இருந்தால் ஏழை எளியவர்கள் அரசியலுக்கு வர முடியாது என்றார்.

தேர்தல் என்பது ஒரு சடங்காக தான் நடந்துள்ளதாக விமர்சித்த அவர் பணம் உள்ளவர்களுக்காக மட்டுமே தான் தேர்தலை நடத்தியது போன்று உள்ளது என்றும் கூறினார். இதனால் தேர்தல் ஆணையம் செயல் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

இதனை அமைதியான தேர்தல் என்று சொல்ல இயலாது என்றும் கூறினார். 5,6 கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டதால் வாக்காளர்கள் சதவீதம் அதிகரித்துள்ளது இந்த நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்
வர கூட காலத்திலாவது இதனை தடுக்க வேண்டும் என்றார்.

இந்த தேர்தல் ஜனநாயக தேர்தல் அல்ல, தேர்தல் பறக்கும் படை போதுமானதாக இல்லை என கூறிய அவர் பணப்பட்டுவாடா குறித்து தெரிவித்தும் நடவடிக்கைகள் இல்லை என்றார். தேர்தல் ஆணையர் அவருடைய கடமையை செய்ததாக தெரியவில்லை என்றும் கூறினார்.

ஓட்டு போடுவது மட்டுமே ஜனநாயகம் கிடையாது எவ்வாறு ஓட்டு போட்டுள்ளார்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற அவர் SIR, விஜயால் தான் வாக்கு சதவீதம் உயர்ந்ததாக கூறப்படும் கருத்துக்கு வெயிலால் காலை நேரத்தில் வந்து வாக்களித்திருப்பார்கள், பணபட்டுவாடா ஒரு காரணம், நிர்பந்தம் செய்திருப்பார்கள், விஜயால் கூட ஓட்டு போட்டிருக்கலாம் ஆனால் அதுமட்டும் காரணம் இல்லை, SIR யால் அதுவும் அதிக வாக்குக்கு காரணம் ஆகலாம் என கூறினார்

திருடனிடம் சாவியை கொடுத்தது போல் SIR யை இரண்டு கட்சிகளில் கொடுத்துள்ளார்கள் எம்றும் தேர்தல் ஆணையத்தை மறு சீரமைக்க வேண்டும் இல்லையென்றால் ஜனநாயகம் படுகுழியில் போகும் என்றார்.மேலும் ஒரு சர்வதேச அமைப்பு தேர்தல் முறையாக நடந்ததா என பார்க்க வேண்டும் என்றார்.


மக்கள் பணம் வாங்கினால் எப்படி குறை சொல்ல முடியும், மக்களின் நிலை இந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்றும் மக்களை அவ்வளவு வறுமையில் வைத்துள்ளார்கள், 500 ரூபாய்க்கு மண்டியிடும் அளவிற்கு மக்களை தள்ளி அவமானம் படுத்துகிறார்கள் என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...