கோவை சிங்காநல்லூரில் திருட்டு சம்பவம் – மக்களே உஷார்…!

கோவை: கோவை சிங்காநல்லூரில் வீட்டு கதவை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி தாமரை நகரைச் சேர்ந்தவர் தாமோதரன் (43). இவர் கடந்த 25-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றார்.

பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் கோவை திரும்பிய அவர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

Advertisement

அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தாமோதரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...