கோவையில் ஒற்றை யானை தாக்கி முதியவர் பலி

கோவை: காட்டில் விறகு சேகரிக்க சென்ற பழங்குடியின முதியவர் மீது யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவை ஆனைகட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள கோபனாரியில் யானை தாக்கியதில் பழங்குடியின முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்

Advertisement

கோபனாரியை சேர்ந்த ரங்கன் மற்றும் அவரது மனைவி ரங்கி ஆகியோர் காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை திடீரென ரங்கனை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரங்கனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மனைவி ரங்கி, யானை தாக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கொடுத்த கடனை திருப்பி கேட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது தாக்குதல்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த ரங்கனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...