கோவை: காவல்துறை மீது மக்களிடம் உள்ள அச்சத்தை மாற்றும் வகையில், கோவை போத்தனூர் D3 காவல் நிலையத்தில் இரு தம்பதியினருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு மனிதநேயம் வெளிப்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் போத்தனூர் D3 காவல் நிலையம் இன்று மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற கோட்பாட்டை நடைமுறையில் உணர்த்தும் வகையில், நிறை மாத கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சீர் செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவையில் மாயமான காட்டெருமை… வனத்துறையினர் தேடல்
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோக் குமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில், இரு தம்பதியினரும் மரியாதையுடன் அமர்த்தப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் பாரம்பரிய முறையில் பட்டு சேலை, வேட்டி-சட்டை, பழங்கள் மற்றும் வளையல்கள் வழங்கினர். மேலும் நெற்றியில் குங்குமம், சந்தனம் வைத்து மலர் தூவி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். காவல் நிலைய வளாகம் குடும்ப விழா சூழலாக மாறியது.
கோவையில் கொடூர விபத்து! விவரம் உள்ளே…! வீடியோ
மேலும், தம்பதியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 16 வகையான பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டு, அன்போடு வரவேற்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மனிதநேய முயற்சியை பாராட்டினர்.


