கோவை: தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடங்குகிறது.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்து, தேர்தல் நடத்தை விதிகள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதனையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மீண்டும் நடைபெற உள்ளது.
வருகிற மே மாதம் 11-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இந்த முகாம் வழக்கம்போல் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும்.
பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எனவே, நீண்ட நாட்களாக மனு அளிக்க காத்திருந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”
நிர்வாக நடைமுறைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு கோவை மாவட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.


