கோவை: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை நீதிமன்றங்களில் இன்று ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.
கோடை காலத்தை முன்னிட்டு வருகிற 31ஆம் தேதி வரை கோவை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்கி Madras High Court உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கும் ஒரு மாத கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
மேலும் வருகிற 13, 20 மற்றும் 27ஆம் தேதிகளில் மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும், 15, 22 மற்றும் 29ஆம் தேதிகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் நீதித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


