உள்ளக குழு அமைக்கவில்லையெனில் அபராதம்- அரசு, தனியார் நிறுவனங்களுக்கு கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: உள்ளக குழு அமைக்காத அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Advertisement

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கூறியதாவது:-

பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி, 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளை நிறுவனங்களில் தனித்தனியாக உள்ளக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

இந்த குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும். உள்ளக குழுத் தலைவராக பெண் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

Advertisement

மேலும், இக்குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் குறித்து நன்கு அறிந்தவராகவோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

இதுவரை உள்ளக குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக உள்ளக குழுவை அமைத்து, அதன் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Advertisement

உள்ளக குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013-ன் கீழ் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.

SHEBOX PORTALhttps://shebox.wed.gov.in/

TNPOSHhttps://www.tnswd-poshice.tn.gov.in/ords/r/wsswdice/swice/home

தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உள்ளக குழு அமைத்துள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆண்டு அறிக்கையை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...