கோவை: தங்களுக்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் மண்டியிட்டு மனு அளித்தனர்.
தள்ளுவண்டிகள் மற்றும் அரசு கட்டடங்களில் கடைகள் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையோர நடைபாதை வியாபாரிகள் மண்டியிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் மண்டியிட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் எங்களுக்கு எவ்வித நலத்திட்டங்களும் கொடுக்கவில்லை என்றும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர் என்றும் எனவே எங்களுக்கான வியாபார குழு உடனடியாக அமைக்க வேண்டும், எங்களுக்கான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் தள்ளு வண்டிகள் வழங்குவதோடு, மாநகராட்சி இடங்களில் அந்தந்த பகுதி வியாபாரிகளுக்கு அரசு வழங்கிய உரிமையின் பேரில் கடைகள் ஒதுக்க வேண்டும் என்றும் இதனை கருத்தில் கொண்டு எங்களுக்கு உடனடியாக நலத்திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து கோவை சாலையோர வியாபாரிகள் நடைபாத வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மணி கூறுகையில், தங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது எந்த திட்டங்களும் உதவிகளும் கிடைக்கப் பெறுவதில்லை என்று தெரிவித்தார். தேர்தல் முடிந்து அனைத்து வசதிகளும் உதவிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில் உடனடியாக அதனை செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். முதல்வர் விஜய் தங்களுக்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றார்.


